Wednesday, November 12, 2014

ஜூலை காற்று

Vizhi Moodi Yosithaal Audio

Film : Vizhi Moodi Yosithaal
Music : Mohammed Aathif
Direction : K G Senthil Kumar
Lyrics : C.M.Lokesh
Singer : Deepak & Chinmayi


பல்லவி:


ஜூலை
காற்று
லேசாய் காதில்
உரைக்கும் உன் பெயரை!

மின்னும்
கண் ரெண்டும்
தூரம்
சென்றாலே
பெண்ணே! என்னை விலகும் என் மனம்

ஏன்
உயிரின் எடை கூட்டினாய்?
கனவெங்கும்
தீ மூட்டினாய்!

தொடுவானம்
தீண்டிவிட ஏங்கினேன்! - உன்
விழிகளில் பூட்டினாய்!

என் காதல் தீவில்
காற்றோடு வந்து
என் தேகம் தீண்டும்
மென் சாரல் நீ!

கண்ஜாடை கொண்டு
நெஞ்சோடு பேசி
என்னுள்ளே பாயும்
மின்சாரம் நீ!

Saalaa Saloothe

Vizhi Moodi Yosithaal Audio

Film : Vizhi Moodi Yosithaal
Music : Mohammed Aathif
Direction : KG Senthil Kumar
Lyrics : C.M.Lokesh
Singers : Deepak, Vikram &  Shakthisree Gopalan


பல்லவி

 ஆண்:

Saalaa Saloothe!!!
ஓன்றாய் வென்றோமே!
பொங்கும் நம் உள் நெஞ்சம் - ஒரு
Champagne போலே!

வெற்றி கோப்பையில்
Vodka அடிப்போம்!
விண்ணெங்கும் மிதப்போம்
ஒரு மேகம் போலே!

செவ்வாயில் தண்ணீர் கிடைத்தால்
எவனுக்கென்ன லாபம்?
Tasmac’இல் Chill Beer தீர்ந்தால்
தகிட தோம் தகிட தோம் தத்தித்த தீம் தோம் தோம்!

எல்லை கோடே இல்லை!- நம் வாழ்வில்
எதிலும் தோல்வி இல்லை!- ஹே! சாலா! சாலா!
சேர்ந்தோம் cocktail போலே- நம் நட்பில்
பேதம் ஏதும் இல்லை… லை… இல்லை…




சரணம் 1:


ஆண்:

அடடா! Friend’ம் சரக்கும்!
முதல்நாள் புதுசாய் இருக்கும்!
இரண்டும் உயிர் உள வரை நமை
விட்டு போக மறுக்கும்!

பெண்:

Professor பேசிடும் பொழுது
முழுசாய் கவனிக்க பழகு
அதைப் போல் மயக்கங்கள் கொடுத்திடும்
போதை ஏது? பதில் கூறு!

ஆண்:

Columbus
காணாத
தேசம் ஒன்றை தேடி
கால்கள்
பதிப்போம்!

பெண்:

Madonna
Michael Jackson னும்
பாடா கானம் ஒன்றை
பாடுவோம்!

ஆண்:

Elliots Beach’ல்
Saturday Party!

பெண்:

Leave வே இல்லை
Sunday வும் செய்வோமே லூட்டி.... Always On Duty....


சரணம் 2:

பெண்:

அழைத்தால் வான்மழை பொழிய
நினைத்தால் நிலவுகள் உதிக்க
நமக்காய் தனி ஒரு உலகினை
இன்பம் கொண்டு படைப்போம்!

ஆண்:

இருக்கும் நாட்களை ரசிப்போம்!
இடுக்கண் வருகையில் புகைப்போம்!
குடிக்கும் பொழுதினில் நமை தொட
சோகம் கூட பயம் கொள்ளும்!

பெண்:

இப்போதே!
இப்போதே!
உந்தன் கோப்பை தன்னை
தூரம் எறிவாய்!

ஆண்:

இப் போதை
தப்பே இல்லை
பானம் தந்த
ஞானம்
வானமாய்!

பெண்:

பேச்சில்
உனையே
வென்றவர்
இல்லையே!

ஆண்:

என்றும்
நான் தான்
வெற்றிக்கு
செல்லப் பிள்ளையே!.... தோற்பதில்லையே!

Ellora சிற்பம்

Vizhi Moodi Yosithaal Audio

Film : Vizhi Moodi Yosithaal
Music : Mohammed Athif
Direction : KG Senthil Kumar
Lyrics : C.M.Lokesh
Singer : Reeta



பல்லவி


Ellora சிற்பம்
நா... நா... நான் தானே!
கள்ளோடை நானே!
களவாடும் கண்ணனே!

கால் கொண்ட சேலா? – ஹே!
நீ சொல் மன்மதா - ஹம்ம்ம்….
மல்யுத்தம் செய்யும்- ஒரு
மல்லிப் பூவடா!

நான்
தத்தி தாவும்- ஒரு
கிள்ளை!

தள்ளாட
செய்திடும் முல்லை!

ஆண்
வேங்கையை
வென்றிட
வந்த புள்ளி மான்
நான் தான்!
நான் தான்!

ஹே
தீரா!
தீயாய் எனை
வாட்டினாய்!

நீ
நீரா?
நீராட வந்தேன்
நான்!

நான்
வேறா?
உன் வேர் இனி
நானடா!

போர்
வீரா!
போர் செய்யும்
பூ நான் தான்!





சரணம் 1


வளைந்தாடும் பெண்மையை
கலைக் கண்ணால் காண வா
தலைக்கேறும் போதையில்
தலை சுற்றி போகலாம் வா!

மணம் வீசும் கூந்தலில்
மலர் வாசம் தேடி வா!
வன வாசம் செய்ய வா!- பெண்
உள்ளம் தின்னும் கள்வா!

புயல்
மையம் கொண்ட
விழி கண்டு

மனம்
மையல் கொண்டதோ
இன்று?

இரு
கண்களின்
கதிர் வீச்சிலே -இள
நெஞ்சம்
துண்டானதோ?

ஹே
தீரா!
தீயாய் எனை
வாட்டினாய்!

நீ
நீரா?
நீராட வந்தேன்
நான்!


சரணம் -2

கலைந்தோடும் மேகமாய்
நிலையற்ற வாழ்விலே
விதி செய்யும் சூழ்ச்சிகள்
அதை வெல்வதாரு இங்கே?

நதிநீரில் வெண்ணிலா
மிதந்தாட பார்க்கலாம்
களவாட எண்ணினால்- உன்
கையில் சேருமா சொல்?

ஒரு
ஆல கால விஷம்
போலே!
உனை மெல்லக்
கொன்றிடுவேனே!

இவள்
தீயவள்!- சுடும்
தீ இவள்! - உயிர்
கொள்ளை கொள்வாள்
இவள்!

(Ellora சிற்பம்.......)

ஜில்லென்ற மேகம்

Vizhi Moodi Yosithaal Audio
Film          : Vizhi Moodi Yosithaal
Music       : Mohammed Aathif
Direction   : K G Senthil Kumar
Lyrics        : C.M.Lokesh
Singer        : Karthik




பல்லவி

ஜில்லென்ற மேகம் - என்
ஜன்னலின் ஓரம்
சாரல்கள் தூவ
கண்டேன் உன்னை நான்!

வானவில் வண்ணம்!- மென்
பூக்களில் தேகம்!
மின்னலின் பிம்பம்! - ஒரு
பெண்ணில் கண்டேன் நான்!

தொலைவில் பார்த்தே
தொலைந்து போகிறேன்
திருடி சென்றவள்
நீயடி!

விழிகள் கொண்டே
வருடி செல்கிறாய்
மனமெல்லாம் தீயடி!

எ... ஹே ... ஹே ...

உன் மௌனத்தினால்
என் இதயத்திலே
உன் நினைவினை
நீயே வரைகிறாய்!

ஏன்?
என் கனவுகளில்
என் கவிதைகளில்
ஓர் உயிரென
நீயே நிறைகிறாய்?... ஏன்?


சரணம்-1


உன்பார்வை தீண்டும் நொடியில்!
என்ஜீவன் தீயின் மடியில்!
என்னாகும் அய்யோ முடிவில்?
பெண்ணே கொல்லாதே!

ஓ!... ஓ!.... ஓ!....

உயிர்தீண்டும் காதல் மழையே!
சதைகொண்ட செல்லப் பிழையே!
இதுஎவரும் காணா நிலையே
உன்னால் கண்டேனே!

மெதுவாய் ! தீப் போல்
என் அணுக்களில் நுழைந்தாய்!
மெழுகாய் உயிரினை
உருக்கிட துடித்தாய்!

நீயென்னை கடந்தால்
எனைசுற்றி எங்கும் பூ வாசம்.............வீசும்!

ஒ!... ஓ!.... ஓ!....

உன் மௌனத்தினால்
என் இதயத்திலே
உன் நினைவினை
நீயே வரைகிறாய்!

ஏன்?
என் கனவுகளில்
என் கவிதைகளில்
ஓர் உயிரென
நீயே நிறைகிறாய்?


சரணம்-2


கண் காணும் யாவும் புதுமை
கள்ளூர செய்யும் இளமை
என்றாலும் கொல்லும் தனிமை
நெஞ்சம் மீளாதோ???

ஓ!... ஓ!.... ஓ!....

காதோடு கொஞ்சும் சிணுங்கள்
நெஞ்சோடு கொஞ்சம் ரணங்கள்
உன்னோடு வாழும் கணங்கள்
இன்னும் நீளாதோ???

முதல்நாள் பார்த்தேன்
என் முகவரி மறந்தேன்!
நெடுநாள் உன்னருகே
வசித்திட துடித்தேன்!

நீ வரம் கொடுத்தால்
சில ஜென்மம் உந்தன் தோள் சாய்வேன்!..... பூவே!

Saturday, September 11, 2010

நினைவுகளே!!!

முதல் முறையாக ஒரு பாடல் (மெட்டுக்கு) எழுதினேன். அன்பு நண்பர் இளவரசன் இசையில் அமைந்த பாடல் அது. கல்லூரி வாழ்க்கையின் அழகை எழுத வேண்டும். முடிவடையும் பொழுது தான் தொடக்கத்தின் அழகு புரியும் என்பார்கள். அது எல்லா விஷயத்திற்கும் பொருந்தும். ஒரு கல்லூரி Farewell'லுக்காக தயார் செய்ய வேண்டிய பாடல். எனக்கு பாடல் எழுதிய அனுபவம் கிடையாது. அழகான நினைவுகளை எப்படி எழுதினாலும் அழகு சேர்ந்துவிடும் என நம்பினேன்.

இந்த பாடலில் ஆண்களின் நினைவுகளை மட்டுமோ அல்லது பெண்களின் நினைவுகளை மட்டுமோ பதிவு செய்துவிட கூடாது. ஆண், பெண் யார் கேட்டாலும் இது தங்களுக்காக இயற்ற பெற்றது என எண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படியே இயற்றினேன். 'கல்லூரி' என்ற சொல்லை தவிர்ககவும் தீர்மானித்தேன்.

கல்லூரி நாட்களில் அங்கு படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் ஒவ்வொரு கவலைகள் இருக்க கூடும். சிலருக்கு பணம் சிலருக்கு குடும்பம் என எத்தனை கவலைகள் இருந்தாலும், வகுப்பறைக்குள் எல்லோரும் கவலை மறந்து சிரித்திருபோம். அழுகின்ற மழைத்துளிகளின் நடுவிலும் சிரிக்கின்ற மின்னலை போல. ஆனால் கல்லூரி முடிந்து புது வாழ்க்கை தொடங்கும் பொழுது பிரிவினை எண்ணி அழுகின்றோம். விடியல் வருவது கூட தெரியாமல் சிரிக்கின்ற மலர்கள் மீது அழுகிறதே பனித்துளி அது போல. இதை முதல் சரணத்தில்

"வாழ்க்கை என்னும் மேகம்
கோடி துளிகள் தூவும்
அழுகின்ற மழையில் சிரிக்கும்
மின்னல் ஆகினோம்!

இரவு முடியும் நேரம்
இரண்டு விழியில் ஈரம்
இது என்ன சிரிக்கும் மலரில்
பனியாய் அழுகிறோம்!"

என எழுதியிருந்தேன். பாடலும் பதிவானது. முதல் பாடல் என்பதால் பிழைகள் இருக்கலாம் சில குறைகள் இருக்கலாம். பிழை இருந்தால் மன்னிக்கவும்.

பாடல்

இசை: இளவரசன்
பாடகிகள்:- சுவேதா, காயத்ரி, நித்யா, விஜயலக்ஷ்மி, ஸ்ருதி.

பல்லவி:-

ஒரு முறை- மீண்டும்
மறுமுறை
ஈர நினைவினில்
மிதப்போம் வா!

கனவுகள்- சோக
கவலைகள்- தாண்டி
அரைநொடி
வாழ்வோம் வா!

நீண்ட மரத்தின் நிழலில்
நாட்கள் நகர்த்தினோம்!
நீல கடலின் அலைபோல்
நித்தம் ஆடினோம்!

வளைகின்ற நதியைப் போல
வாழ்க்கை வாழ்கிறோம்!
கரை சேரும் நேரம்- கண்ணீர்
விட்டுக் கரைகிறோம்!

இன்று வரும் தென்றல் காற்று
மௌனம் தாங்கி வருதே!
பூக்களின் மொழியை கேட்டு
மௌனம் சிதறுதே!

சரணம்-1:

வாழ்க்கை என்னும் மேகம்
கோடி துளிகள் தூவும்
அழுகின்ற மழையில் சிரிக்கும்
மின்னல் ஆகினோம்!

இரவு முடியும் நேரம்
இரண்டு விழியில் ஈரம்
இது என்ன சிரிக்கும் மலரில்
பனியாய் அழுகிறோம்!

முதல் முறை பேரை கேட்டு
பிறந்தது எங்கள் நட்பு!
கடைசியில் கண்ணீர் விட்டு
பிரிவதே கால கூற்று!

நட்பென்னும் உறவின் அழகை
பிரிவே சொல்லுமே!

சரணம்-2

தூவும் மழையில் நனைந்தோம்!
கூவும் குயிலாய் திரிந்தோம்!
காற்றென உலவும் நெஞ்சில்
சுமைகள் இல்லையே!

உண்ணும் உணவில் கொஞ்சம்
இன்ப துன்பம் கொஞ்சம்
பரிமாறிக்கொள்ளும் நட்பில்
சோகம் இல்லையே!

வலவல அரட்டைகள் எங்கே?
வகுப்றை குறட்டைகள் எங்கே?
தீயெனும் கோபங்கள் எங்கே?
பூவெனும் புன்னகை எங்கே?

இன்னொரு ஜன்மம் கேட்டு
இங்கே தேடுவோம்!

Sunday, May 16, 2010

கவிமழலை

நாவுரைக்கும் மொழியெல்லாம் நடைபழகும் நயமென்று
மூவுலகும் கேட்கும்படி முழங்கச்சொல் என்வேந்தே!

கற்ற கவிமேதை கடலென்றே விரிந்திருக்க
அற்பக் கவிஞன்நான் கவிமழலை பேசுகிறேன்.

அழகியமலரே! உன்னை முழுதாய் இலையென்றாலும்
பழகிய தமிழில்நான் பாடிப் புனைகின்றேன்.

முல்லை மலரொடு மூடிவைத்த மணமெல்லாம்
சொல்லுடன் ஆடவைத்து சுககவியை 'கொடு'(த்)தாயே!

விண்விட்டு வெண்ணிலவுன் பொன்பட்டப் பாதத்தில்
கண்தொட்டு வணங்கும் பைந்தமிழே! உன்புகழை

வெண்பட்டுத் திரைமீது விரல்தொட்டு நானெழுத
என்பாட்டில் நீவந்து எழுந்தாடு முத்தமிழே!

ஆடிப் பாடியிங்கு அரைகுறையாய் வாழ்ந்தவனை
தேடி வந்தாயே தேன்தமிழே! தலைமகளே!

அழைத்து வெண்ணிலவை பொன்னொடு பூச்சேர்த்து
குழைத்து மேனியெங்கும் இழைத்த அழகென்றே

தோன்றிய எழில்மகளே! தேவர் குலத்தாளே!
ஈன்று எனையெடுத்து தமிழென்னும் பாலூட்டி

உடலோடு கவியை உறவாடச் செய்தாயே!
கடலாடும் அழகை கற்பனையாய் நெய்தாயே!

காலை கண்விழித்து கதிரவன் வலம்முடித்து
மாலை மயக்கத்தில் மலைமீது முத்தமிட

நாணிச் சிவக்கிறதோ நித்தமடி வானமென
ஊனில் கிடந்த உயிர்த்தமிழை தினம்கேட்டு

மயங்கிவிட்ட நினைவுகளை மௌனமாய்ப் பேசவைத்துத்
தேயாத கனவுகளைத் தமிழோடு சேர்த்துவிட்டேன்!

Monday, January 18, 2010

என் தமிழே!

பூவிற்கே தேனளித்த பூமகளே! அன்றென்றன்
நாவிற்கு நற்றமிழை தந்தாயே-ஆவியென
அங்கம் நிறைந்தாயே அன்னமே! உன்நெஞ்சில்
தங்க இடமொன்று தா!